செய்திகள் :

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

post image

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வான் பாதுகாவலன் என்ற அடையாளத்தோடு, விமானப் படையில் சேர்க்கப்பட்ட மிக்-21 போர் விமானம், ‘கார்கில்’ போர் முதல், கடைசியாக நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரை நாட்டின் எல்லையைக் காக்க பணியாற்றியுள்ளது.

விண்வெளி குழுவுக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, போர் விமானியாக இருந்த இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா இந்த மிக்-21 போர் விமானம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நான் அதை எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் பறக்கும் விமானத்துடனே உங்கள் வாழ்க்கையும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்தவரை விமானத்துடன் என வளர்ச்சியின் தனிப்பட்ட பயணமாகும். விமானத்தை வழியனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த விமானங்கள் மீது பல்வேறு விமர்சங்கள், உயிரிழப்புகள் இருந்தாலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் படையில் தன்னிகரில்லாத இடத்தைப் பெற்றிருந்தது மிக்-21. இந்த விமானங்களில் விண்வெளி வீரர்கள், பயிற்சி விமானிகள், விமானப்படைத் தளபதிகள் என பலரும் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MiG-21 to space: Shubhanshu Shukla recalls growing up with the iconic fighter jet

இதையும் படிக்க... வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சம... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ‘தி சட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் மிகவும் பிரபலமான... மேலும் பார்க்க

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவகள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் இந்த வினோதமான சம்... மேலும் பார்க்க