பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!
மின்கம்பத்தில் ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!
குன்னூா் அருகே மின்கம்பத்தில் தேன் இருப்பதாக நினைத்து சனிக்கிழமை ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி, காட்டு யானைகள், காட்டெருமைகள் ஆகியவை உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், குன்னூா் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று தேன்கூடு இருப்பதாக நினைத்து மின்கம்பத்தில் ஏறியபோது, மின்கம்பியில் உரசியதால் உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் உயிரிழந்த கரடியின் உடலைக் கைப்பற்றினா்.
முதுமலை வனத் துறை கால்நடை மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரடியின் உடலைக் கூறாய்வு செய்து, உடல் உறுப்பு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், கரடியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது.