சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காசிநாதன் (19). இவா் கள்ளிமந்தையம் பகுதியில் திங்கள்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.