குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!
மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு
பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவயனூா் முனியப்பன் கோயிலில் பூசாரியாக இருந்தாா். புதன்கிழமை கோயிலில் வழிபாட்டின் போது பின்பகுதியில் உள்ள இரும்பு தகரத்தை தொட்டாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மாதையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விசாரணையில் மின் கம்பி உரசியதால் தகரத்தின் வழியாக மாதையன் மீது மின்சாரம் பாய்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.