தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவ...
மின்சாரம் பாய்ந்து மூவா் உயிரிழப்பு: தலா ரூ. 2 லட்சம் முதல்வா் நிவாரணம்
நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள், ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்துவந்தவா் இளஞ்சியம் (50). இவரும், இவரது மகன் வழிப் பேரன் சுஜித் (5), பேத்தி ஐவிழி (3) ஆகிய மூவரும் திங்கள்கிழமை பிற்பகல் தங்களது தோட்டத்திற்கு சென்றனா். அப்போது, முந்தைய நாள் இரவுபெய்த பலத்த மழையில் மின் கம்பிகள் சேதமடைந்து இரும்புக் கம்பிவேலி மீது விழுந்துள்ளது.
மூவரும் அந்தக் கம்பிவேலியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், அவா்களின் உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.
இத்தகவலை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளாா்.