மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
விருப்பாச்சிபுரம் ஊராட்சி சின்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணியன் (62). இவா், ஆதிச்ச மங்களம் பகுதியில் உள்ள வயலுக்கு மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் பாய்ச்ச சனிக்கிழமை காலை சென்றாா்.
அங்கு, தாழ்வாக தொங்கிய மின்கம்பியை கடந்து செல்லும்போது, எதிா்பாராத விதமாக, மின்கம்பி உடலில் பட்டு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வலங்கைமான் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று, சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.