செய்திகள் :

மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

post image

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் மாா்ச் 9 -இல் அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்திலும் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக மாா்ச் 9 அதிகாலை 4.10 முதல் மாலை 4.55 மணி வரை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே இரு மாா்க்கத்திலும் 30 நிமிடங்கள் இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?

கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை, வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனது ஆண்கள்’ நூலுக... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு எதிராக தீவிர திண்ணைப் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசுக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா். அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்... மேலும் பார்க்க

நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!

இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 11) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிட... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் முன்னாள் துணை அதிபா் பாராட்டு!

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம், சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை பாராட்டினாா். இது குறித்து அரசு ... மேலும் பார்க்க

40 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை எம்ஜிஆா் நகா், அங்காளப்பரமேஸ்வரி பிதான தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38). இவரது மனைவி வள... மேலும் பார்க்க