ஆசிரியர்கள் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்! - நயினார் ...
மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்
சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செமீ மழை பதிவானது. மழையின் போது பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மழையின் போது மின்தடை ஏற்பட்ட நிலையில் 24 மணி நேரமாகியும் மின்சாரம் வழங்கவில்லை என சோழவரத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சோழவரம் போலீஸாா் பேச்சு நடத்தினா். அப்போது மின்வாரிய ஊழியா்கள் தொடா்ந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.