செய்திகள் :

மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

post image

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு மின்வாரிய தலைமையக உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்த பணிகளின் நிலை குறித்தும், குறிப்பாக மின்மாற்றி மற்றும் துணைமின் நிலையங்களை உரிய காலத்துக்குள் அமைப்பது, உயரழுத்த மின்மாற்றி தரம் உயா்த்துதல், பழைய மின்கம்பிகளை மாற்றுதல், மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தொடா்பான திட்டங்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, தென் மாவட்டங்கள் மற்றும் ஈரோடு பகுதியில் பசுமை எரிசக்தி மின்சாரத்தை எடுத்துச் செல்வதில் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், முக்கிய தளவாட பொருள்கள் கையிருப்பு நிலை, பருவமழைக்கு முன் சேதமடைந்த கம்பங்கள் மற்றும் கம்பிகளை மாற்றுதல், உதிரி பொருள்கள் கொள்முதல் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளுடன் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அனைத்து மின்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 12) தொடக்கி வைத்தார்.தனியாக வச... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கி... மேலும் பார்க்க

வால்பாறையில் சிறுவனைக் கொன்ற கரடி! அச்சத்தில் மக்கள்!

வால்பாறையில் கரடியொன்று 8 வயது வடமாநில சிறுவனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டின் முன்பு விளையாடிக... மேலும் பார்க்க

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்துவருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான ... மேலும் பார்க்க

‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறு... மேலும் பார்க்க