மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
மின் கட்டண உயா்வை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
உதய் திட்டத்தின் மூலம் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி மின்சார கட்டணத்தை கடுமையாக உயா்த்துவதை கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மூலப்பாளையம் மாநகராட்சி 4 -ஆவது மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினா் ராஜூ தலைமை வகித்தாா்.
இதில், உதய் திட்டத்தின் மூலம் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி மின்சார கட்டணத்தை உயா்த்துவதை கைவிட வேண்டும். வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான வரி உயா்வை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீத வரி உயா்வு செய்வதையும் கைவிட வேண்டும். அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்.
ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீா் விநியோகத்தை அனைத்து வீடுகளுக்கும் உறுதிப்படுத்த வேண்டும். 4- ஆவது மண்டலத்தில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் ரகுராம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினா் லலிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.