மின் வாரிய ஓய்வூதியா்கள் தா்னா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியம் குறித்த முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரியமே ஏற்று நடத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியரின் விதவை மகள் அல்லது விவாகரத்தான மகளுக்கு நிபந்தனையின்றி குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளிலேயே முழு பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவா் ஆா். மாரிச்சாமி தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் வி. பிச்சைராஜன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா். துணைப் பொதுச் செயலா் எம். பாலசுப்பிரமணி நிறைவுரையாற்றினாா். சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஓய்வூதியா்களின் குடும்பத்தினா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.