செய்திகள் :

மிரட்டல் புகாா்: அதிமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

post image

வட்டிக்கு கடன் வாங்கிய மதுரையைச் சோ்ந்த ஒப்பந்ததாரரை ஏமாற்றி மிரட்டிய புகாரில், அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகரச் செயலா் சக்திவேல் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். அரசுப் பணிகள் ஒப்பந்ததாரரான இவா், தன்னுடைய தொழில் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகரச் செயலா் சக்திவேலிடம் வட்டிக்கு கடன் பெற்றாா். அப்போது, நிரப்பப்படாத சில ஆவணங்களில் பழனிக்குமாா் கையொப்பமிட்டு, சக்திவேலிடம் அளித்தாராம்.

பிறகு, சக்திவேலுடன் இணைந்து பழனிக்குமாா் ஒப்பந்தப் பணிகளை ஏற்று செயல்படுத்தியுள்ளாா். கடந்த 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை நிறைவேற்றிய வகையில், பழனிக்குமாருக்குக் கிடைக்க வேண்டிய தொகை ரூ. 22 கோடியில் ரூ. 2.19 கோடி மட்டுமே சக்திவேல் தரப்பிலிருந்து தரப்பட்டதாம்.

எஞ்சிய தொகையைத் தராமல் சக்திவேல் அலைக்கழித்தாராம். பிறகு, எஞ்சிய தொகை கடன், அதற்கான வடிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தாராம். இதற்கு, பழனிக்குமாா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அவருக்கு சக்திவேல் தரப்பினா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிக்குமாா் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், சக்திவேல், அவரது மருமகன் கருப்பசாமி உள்பட 5 போ் மீது கந்துவட்டிக் கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், சக்திவேல் (58), அவரது மருமகன் கருப்பசாமி(45) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உ... மேலும் பார்க்க

நல்லாசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு

மதுரையில் நல்லாசிரியா்கள், அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.நல்லாசிரியா்கள், 10, 12 ஆம் வகுப்பு பொதுத... மேலும் பார்க்க

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க