செய்திகள் :

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

post image

மும்பை: புதிய அந்நிய நிதி வரவுகள் மத்தியில் எண்ணெய், ஆட்டோ மற்றும் வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதையடுத்து இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,000 புள்ளியைத் கடந்து நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 778.26 புள்ளிகள் உயர்ந்து 80,636.05 ஆக இருந்தது. சந்தை முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் இன்று 746.29 புள்ளிகள் உயர்ந்து 80,604.08 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 221.75 புள்ளிகள் உயர்ந்து 24,585.05 ஆக நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் சுமார் 2,136 பங்குகள் உயர்ந்தும், 1,867 பங்குகள் சரிந்தும், 161 பங்குகள் மாற்றமில்லாமலும் வர்த்தகமானது.

3 மாத சரிவுக்கு பிறகு, இன்று வெகுவான எழுச்சியைக் கண்டது இந்திய பங்குச் சந்தை. உலகளாவிய அளவில் நேர்மறையான அறிகுறி தென்பட்டதாலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் வருவாய் படிப்படியாக உயர்ந்ததால், இது முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக உயர்த்தியது.

முதலீட்டாளர்கள் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அமெரிக்க - ரஷ்யா உச்சிமாநாட்டை நேர்மறையாக அணுகி வருவதால், பதட்டங்களின் தீவிரத்தைத் இது மேலும் தணித்துள்ளது.

சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், எடர்னல், டிரென்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் மாருதி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயரந்து வர்த்தகமான நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடன் முடிந்தது. விடுமுறை காரணமாக ஜப்பானில் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 9) தேதியன்று உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 9) ரூ.1,932.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் இன்று சரிந்தன. உக்ரைன் போர் குறித்து இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததால், கடந்த வாரம் 4% க்கும் அதிகமான சரிவுகளை கண்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.45 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.29 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: டிவிஎஸ் சப்ளை செயின் லாபம் ரூ.71.16 கோடியாக உயர்வு!

On August 11, Sensex closed 746.29 points higher at 80,604.08 and Nifty ended 221.75 points higher at 24,585.05.

தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 1 முதல் புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பல போயிங் 787 ட்ரீம்லைனர் வி... மேலும் பார்க்க

பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியீட்ட வெல்கியூர்!

புதுதில்லி: வெல்கியூர் நிறுவனத்தின் வாரியமானது ஆகஸ்ட் 22 தேதியன்று ஒன்றுகூடி நிறுவனத்தின் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீடு குறித்த அறிவிப்பை பரிசீலிக்கும் என்றது.பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், வெ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு தொடர்ச்சியாக டாலர் தேவையும், இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் மதிப்பு இன்று 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்... மேலும் பார்க்க

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

ஜியோ பயனர்கள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் பார்க்கும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், தினசரி இணையம், அளவ... மேலும் பார்க்க

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

ஓப்போ கே 13 டர்போ வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில், 7000mAh திறனுடன் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இத... மேலும் பார்க்க

டிவிஎஸ் சப்ளை செயின் லாபம் ரூ.71.16 கோடியாக உயர்வு!

சென்னை: உலகளாவிய சப்ளை செயின் தீர்வுகள் வழங்குநரான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.71.16 கோடியாக உயர்ந்துள்ள... மேலும் பார்க்க