செய்திகள் :

மீண்டும் பேசுபொருளாகும் கீழடி... ஶ்ரீராமன் அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

post image

கீழடி - இப்போது மீண்டும் பேசுப்பொருள் ஆகியுள்ளது.

2015-ம் ஆண்டு, கீழடியின் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது.

2017-ம் ஆண்டு மூன்றாம் கட்ட ஆய்வுப்பணிகளின் நடந்துகொண்டிருந்தப் போது, அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, பி.எஸ் ஶ்ரீராமன் நியமிக்கப்பட்டார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன்
அமர்நாத் ராமகிருஷ்ணன்

ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்த இடமாற்றம், 'மத்திய அரசு வரலாற்றை மறைக்கப் பார்க்கிறது' என்று தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளம்பியது.

அவருக்கு பிறகு, அந்தப் பணியில் அமர்த்தப்பட்ட ஶ்ரீராமன் மூன்றாம் கட்ட ஆய்வு குறித்து, "கீழடி ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

இதுவும் பெரும் சர்ச்சை ஆனது.

ஶ்ரீராமன் தயார் செய்ய உள்ள அறிக்கை

இந்த நிலையில், தற்போது 'கீழடி - ஶ்ரீராமன்' என்ற பேச்சு பரபரப்பாக தொடங்கியுள்ளது.

காரணம் அவர் தற்போது கீழடியின் மூன்றாம் கட்ட ஆய்வு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க உள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுவதாவது...

"நான் ஓய்வுப்பெற்றதால், கீழடி மற்றும் ஈரோடு அகழ்வாய்வு அறிக்கைகளை இன்னும் சமர்பிக்கவில்லை. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் இதற்கான ஒப்புதலை கேட்டிருந்தேன். அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.

கீழடி
கீழடி

இந்த ஆய்வுக்கு சம்பந்தப்பட்டவை சென்னையில் இருப்பதால், சீக்கிரம் அறிக்கையைத் தயாரிக்க தொடங்கிவிடுவேன்".

2019-ம் ஆண்டு, ஶ்ரீராமன் ஓய்வுப்பெற்றார். அதனால், அவர் இதுவரை, கீழடியின் மூன்றாம் கட்ட ஆய்வுப்பணி அறிக்கையை சமர்பிக்கவில்லை.

கடந்த மாதம், அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு மத்திய தொல்லியல் துறை கூறியிருந்தது. ஆனால், அதை மறுத்து, தன்னுடைய அறிக்கை சரியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறிவிட்டார்.

இந்த நிலையில், ஶ்ரீராமனை தற்போது அறிக்கை தயார் செய்ய கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க

`குப்பை டெண்டரில் கைமாறிய லஞ்சத்தால் புதுச்சேரியில் துர்நாற்றம் வீசுகிறது’ - அரசை சாடும் திமுக

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்... மேலும் பார்க்க