தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
மீண்டும் மாகாபா உடன் இணையும் செளந்தர்யா!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை செளந்தர்யா மாகாபா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாகாபா கேள்வி கேட்கும் டாஸ்க்கில் செளந்தர்யா பங்கேற்றிருந்த நிலையில், தற்போது முழு நேர நிகழ்ச்சியில் செளந்தர்யா கலந்துகொண்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தை செளந்தர்யா தக்கவைத்துக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில இணையத் தொடர்களிலும் பாடல்களிலும் செளந்தர்யா நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
அடுத்தடுத்த புதிய வாய்ப்புகளில் செளந்தர்யா கவனம் செலுத்திவரும் நிலையில், விஜய் தொலைக்காட்சியில் மாகாபா ஆனந்த் நடத்தும் கம்பெனி நிகழ்ச்சியில் செளந்தர்யா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
அதில் மாகாபா ஆனந்த் மற்றும் சக பிரபலங்களுடன் செளந்தர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற செளந்தர்யா, தற்போது எங்குச் சென்றாலும் அதனை அவரின் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர்.