செய்திகள் :

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

post image

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதையும் படிக்க : ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பிறகு, கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் ராக்கெட் தானாக வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளனர்.

ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. எரிந்துகொண்டே பூமியை நோக்கி வந்த பாகங்களை விடியோ எடுத்த பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலிருந்த 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்,

“ராக்கெட் குப்பைகளில் எந்த நச்சுப் பொருள்களும் இல்லை, இதனால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற சோதனையின் மூலம், நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி கிடைக்கிறது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும்.

அமெரிக்க விமானத் துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமா? வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் திரிந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

வாஷிங்டன் : வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சனிக்கிழமை(மார்ச் ... மேலும் பார்க்க

காய்ச்சல் இல்லை; ரத்தத்தில் சீரான ஆக்சிஜன்: போப் உடல் நிலை குறித்து வாடிகன்!

போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருவதால்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் சொத்து சூறையாடப்படும்: பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஹமாஸின் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக... மேலும் பார்க்க

சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி

சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படை... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வ... மேலும் பார்க்க

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்இஎம்ஆா்சி) கூறியதாவது:ேதிபத்தையொட்டி நேபாள பகுதியில... மேலும் பார்க்க