செய்திகள் :

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,089 புள்ளிகளுடனும், நிஃப்டி 374 புள்ளிகளுடன் நிறைவு!

post image

புதுதில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகள் நேற்று சரிந்து முடிந்து வர்த்தகப் போர் ஏற்படும் அச்சத்தையும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பதட்டத்தையும் உருவாக்கியது.

இந்தநிலையில், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏறுமுகம் காட்டத் தொடங்கியதடுத்து, நேற்றைய அமர்வின் இழப்புகளிலிருந்து மீண்டு, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை முதல் உயர்வுடன் வர்த்தகமானது.

டாப் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் இன்று 1,283.75 புள்ளிகள் உயர்ந்து 74,421.65 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 415.95 புள்ளிகள் உயர்ந்து 22,577.55 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய நண்பகல் 1.00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,590.51 புள்ளிகள் உயர்ந்து 74,728.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 483.70 புள்ளிகள் உயர்ந்து 22,645.30 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,089.18 புள்ளிகள் உயர்ந்து 74,227.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 374.25 புள்ளிகள் சரிந்து 22,535.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருப்பது பங்குச் சந்தையை சரிவில் இருந்து ஓரளவு மீட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தனது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிடவுள்ளதும், பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளதும் இந்தியப் பங்குச் சந்தையின் மீட்சிக்கு நம்பிக்கையாக இது அமைந்தது.

எனினும், நேற்றைய சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தைகளின் சரிவு சற்று குறைவாகவே இருந்தது.

நிஃப்டி 50 - 374.25 புள்ளிகள் உயர்ந்து (1.69%) 22,535.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 100 - 399.75 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 23,077.65 புள்ளிகளாகவும், நிஃப்டி நெக்ஸ்ட் 50 - 1,261.35 புள்ளிகள் உயர்ந்து (2.12%) 60,807.55 புள்ளிகளாகவும், நிஃப்டி வங்கி - 650.90 புள்ளிகள் உயர்ந்து (1.31%) 50,511.00 புள்ளிகளாகவும், நிஃப்டி 100 - 399.75 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 23,077.65 புள்ளிகளாகவும், நிஃப்டி மிட்கேப் 100 - 1,028.55 புள்ளிகள் உயர்ந்து (2.11%) 49,838.00 புள்ளிகளாகவும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 - 321.10 புள்ளிகள் உயர்ந்து (2.13%) 15,389.00 புள்ளிகளாகவும், நிஃப்டி ஆட்டோ 322.60 புள்ளிகள் உயர்ந்து (1.63%) 20,138.15 புள்ளிகளாகவும், நிஃப்டி எஃப்எம்சிஜி 1,059.10 புள்ளிகள் உயர்ந்து (1.99%) 54,300.25 புள்ளிகளாகவும், நிஃப்டி ஐ.டி. 575.60 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 33,244.40 புள்ளிகளாகவும், நிஃப்டி வங்கி 650.90 புள்ளிகள் உயர்ந்து (1.31%) 50,511.00 புள்ளிகளாகவும் முடிந்தது.

டைட்டன், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் உயர்ந்து முடிந்தது.

நிஃப்டியில் ஜியோ பைனான்சியல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, சிப்லா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் பவர் கிரிட் பங்குகள் மட்டுமே சரிந்து முடிந்தது.

கேப்பிட்டல் குட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கிகள், ரியாலிட்டி, டெலிகாம், மீடியா ஆகிய துறை சார்ந்த குறியீடுகள் 2 முதல் 4 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 2,957 பங்குகள் வர்த்தகமான நிலையில், 2,391 பங்குகள் உயர்ந்தும் 499 பங்குகள் சரிந்தும் 67 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.32 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 65.06 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: டொயோட்டா விற்பனை புதிய உச்சம்!

எஸ்&பி 3.83 சதவிகிதம் உயர்வுடன் வர்த்தகம்!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிவிதிப்பு அதிகரிப்பை அறிவித்ததிலிருந்து ஏற்பட்ட வரலாற்று இழப்புகளிலிருந்து மீண்டு, வால் ஸ்ட்ர... மேலும் பார்க்க