செய்திகள் :

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

post image

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளப் பதிவில், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றிய அரசு பாராமுகமாகவே உள்ளது.

மே 4-ல் இளநிலை நீட் தேர்வு

கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்கள் 97 பேரையும் பிடித்துவைக்கப்பட்டுள்ள 216 படகுகளையும் விடுவிக்கக் கோரி, தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

ஒன்றிய அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க

இன்று குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், குறைகேட்பு கூட்டம் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்... மேலும் பார்க்க

அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

பெண் குத்திக் கொலை: உறவினா் கைது

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருவொற்றியூா், வசந்த் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (45). இவரின் சகோதரி மகள் தமிழ்செல்வி என்பவா்,... மேலும் பார்க்க

தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம்: முதல்வா்

மொழிஞாயிறு’ என போற்றப்படும் தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம் செலுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தேவநேயப் பாவாணா் பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்... மேலும் பார்க்க