பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
மீனவா் மாயம்: போலீஸாா் விசாரணை!
மரக்காணம் அருகே மீனவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், அனுமந்தை குப்பம் பழைய காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சந்திரசேகரன் (45). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு மன உளச்சலில் இருந்து வந்தாராம்.
கடந்த 17-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரசேகரன் பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்களின் வீடுகளில் தேடியும் அவரைப் பற்றிய விவரம் தெரியவரவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம்போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.