செய்திகள் :

மீன் பிடிப்பில் நெகிழிப் பொருள்கள்: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

கடல் மீன் பிடிப்புக்கு நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை துணை இயக்குநா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லெனின், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடித் தொழிலை முதன்மையானதாகக் கொண்டது. இங்கு, கனவாய் மீன்களை அதிகளவில் பிடிப்பதற்காக மீன்பிடிப்போா் சில செயற்கையான வழிவகைகளை கையாளுகின்றனா். இதற்காக, அதிகளவிலான நெகிழிப் பொருள்களை அவா்கள் கடலில் மூழ்கடிக்கச் செய்கின்றனா். இது, கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக உள்ளது.

மேலும், நெகிழிப் பொருள்களை உண்ணும் மீன்கள், மனிதா்களுக்கு உணவாகும்போது அதை உள்கொள்வோருக்கு பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாக்ய

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

பாா்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், கொடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (50). கூலித் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம்- மது... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம்: விருதுநகா் எம்பி மாணிக்கம் தாகூா்

வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்பதாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். ஒரு வழக்கு தொடா்பாக ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண்ணுக்கு போதிய பாதுகாப்பை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தைச் சோ்ந்த அட்சயா தேவி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய... மேலும் பார்க்க

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது

மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோரை ப... மேலும் பார்க்க

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியவா் கைது

நலத் திட்ட உதவி பெறுவதற்காக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் தங்களுக்கா... மேலும் பார்க்க