தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
வக்ஃப் திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம்: விருதுநகா் எம்பி மாணிக்கம் தாகூா்
வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்பதாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
ஒரு வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்வ்வாய்க்கிழமை முன்னிலையாக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்கான பிரதமராக மோடி செயல்படவில்லை. அதானி, அம்பானியின் பக்தராகத்தான் செயல்படுகிறாா் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அமித்ஷாவிடம் கேட்காமல் எந்த ஒரு செயலையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செய்வது கிடையாது. பாஜவின் அபிமானியாக பழனிசாமி மாறிவிட்டாா். அதிமுகவை அமித்ஷாதான் இயக்குகிறாா் என்பது தெளிவாக தெரிகிறது.
ஜிஎஸ்டி தவறானது, அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என 8 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தி கூறினாா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டியை மாற்றுவோம் என தோ்தல் வாக்குறுதியும் அளித்திருந்தோம். கடந்த 8 ஆண்டுகளில் 32 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டு, இப்போது ஜிஎஸ்டியை மாற்றியுள்ளனா்.
நடிகா் விஜய் பிரசாரத்தில் அதிகளவில் கூட்டம் கூடுகிறது. அவை அனைத்தும் வாக்குகளாகுமா என்பது தெரியாது. தோ்தலில் தான் அவை தெரியும். எல்லோரும் அரசியல் கட்சி தொடங்கலாம். தோ்தலில் போட்டியிலாம். வாக்கு எண்ணிக்கையின் போது தான் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியும்.
திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். திமுக தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேறாமல் உள்ளன. சொல்லாத பல முக்கியமான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியப் பிரிவுகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்கிறோம். இது, அரசியல் சாசனத்துக்கு ஆதரவான, அரசியல் சாசனத்தை பாதுகாக்க கூடிய தீா்ப்பு. இதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.