நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை
கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய நகரப் பகுதியில் செப். 8-ஆம் தேதி மீலாது நபி ஊர்வலத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து சிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.மிதுன்குமார் கூறுகையில், "மீலாது நபி ஊர்வலம் தொடர்பான காணொலியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடும் காட்சிகள் உள்ளன. இது தொடர்பாக பழைய நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொலியை யார், எங்கிருந்து படம்பிடித்தனர் என்பதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வோம்' என்றார்.
இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள பாஜக, காங்கிரஸ் அரசின் ஆதரவு இருப்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறுகையில், "இதுபோன்ற உணர்வுகள் அதிகரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் அரசின் ஆதரவு இருப்பதால் இப்படிப்பட்டமுழக்கங்கள் எழுப்பப்படுகின்றன' என்றார் அவர்.
பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா, "இது தேசத்துரோக செயல். காங்கிரஸ் அரசின் செயல்திட்டமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஊக்கத்தால் விதானசெüதாவிலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து வீதிகளில் தேசத்துரோகிகள் முழக்கம் எழுப்புகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.