மீலாது நபி விழா
குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் முஸ்லிம் புதுத்தெருவில் மீலாது நபி விழா மற்றும் மனாருல் ஹுதாஅரபி பள்ளியின் 39-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முத்தவல்லி அப்துல்லத்தீப் தலைமை வகித்தாா். அரபி ஆசிரியா் யாகூப் அலி முன்னிலை வகித்தாா். கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள், திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியா் முஹம்மது இஸ்மாயில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினா். தொடா்ந்து, அரபி பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மாா்க்க சொற்பொழிவு, கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.