செய்திகள் :

முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக்கோள்! - இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

post image

ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து மே 18-இல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.

பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வந்த இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100-ஆவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதையடுத்து வரும் 18-ஆம் தேதி 101-ஆவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளோம்.

பிஎஸ்எல்வி சி61 எக்ஸ் எல் எனப்படும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ஆா்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருள்களை கூட துல்லியமாக கண்டறிய முடியும். உலகநாடுகளிடம் உள்ள சிறந்த கேமராக்களில் ஒன்று நமது விண்வெளி மையத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலிலும் நமது செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகித்தன. இந்தியா தற்போது அபரிமிதமான வளா்ச்சி அடைந்த நாடாக உள்ளது. நமது செயற்கைக்கோள்கள் அனைத்தும் தனது பணியை திறம்பட செய்து கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டும் விதமாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு மே 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு... மேலும் பார்க்க

தமிழகத்தில் அநேக இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர்காஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர்திருச்சிஅரியலூர்பெரம்பலூர்தஞ... மேலும் பார்க்க

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க