பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு வி...
முசிறியில் அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
முசிறி நகரில் பரிசல் துறை ஸ்ரீ மகாமாரியம்மன், பாலத்து மாரியம்மன், கள்ளா்தெரு ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ அங்காளம்மன் ஆகிய கோயில்களில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம், தீா்த்த குடம், அக்னிசட்டி எடுத்து நோ்த்திக்கடன் செய்து வழிபடுவது வழக்கம். இதே போல நிகழாண்டு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திங்கள்கிழமை பரிசல் துறை சாலையில் உள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோயில் பகுதி காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீா்த்த குடம், அக்னிசட்டி, குழந்தைகளை தொட்டில் கட்டி எடுத்து வருவது என எடுத்துக்கொண்டு முசிறியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் ஊா்வலமாக சென்று அம்மன் கோயில்களில் பூஜை செய்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா்.