செய்திகள் :

முட்டாள்தனமான ஷாட்..! ரிஷப் பந்த்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

post image

ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது குறித்து முன்னாள் இந்திய வீரர் முட்டாள்தனமான ஷாட் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடர் முழுவதும் சுமாரான பேட்டிங்கை கொடுத்துவரும் ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டு வருகின்றன.

போலாண்ட் வீசிய ஓவரில் ஒரேமாதிரி ஷாட் அடிக்க முயற்சித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வர்ணனையின்போது கூறியதாவது:

முட்டாள், முட்டாள், முட்டாள். உனக்காகவே அங்கு 2 ஃபீல்டிங் வைத்திருக்கும்போதும் நீ அந்த ஷாட்டுக்கு போகிறாய். இதற்கு முந்தைய ஷாட்டில் அடிக்கமுடியாமல் இருந்தாய். இப்போது எங்கு ஆட்டமிழந்திருக்கிறாய் பார்த்தாயா? இது உனது விக்கெட்டை தூக்கி எறிவதற்கு சமம். இந்தியாவின் சூழ்நிலைக்கு இது தேவையில்லை.

சூழ்நிலையை புரிந்து ஆட வேண்டும். இதுதான் உனது இயல்பான் ஆட்டம் எனக் கூறக்கூடாது. என்னை மன்னிக்கவும் இது உங்களது இயல்பான் ஆட்டம் கிடையாது. அது ஒரு முட்டாள்தனமான ஷாட். இது உங்களது அணியை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும்.

அவர் இந்திய அணியின் ஓய்வறைக்கு செல்லக்கூடாது. வேறு ஓய்வறைக்கு செல்லட்டும் என்றார்.

என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?

தன்னுடைய டெஸ்ட் போட்டியில் விளையாடும் திறனை சந்தேகப்பட்டவர்களுக்கு, தன்னால் விளையாட முடியும் என நிரூபித்துவிட்டதாக இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அ... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனி... மேலும் பார்க்க

“200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ந... மேலும் பார்க்க

முகமது சிராஜுக்கு நன்றி கூறிய நிதீஷ் ரெட்டியின் தந்தை!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு, இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி நன்றி கூறியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போ... மேலும் பார்க்க

ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷகிதி அசத்தல்; வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் எடுத்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வர... மேலும் பார்க்க

இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக மாறி ரஹ்மத் ஷா சாதனை படைத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும... மேலும் பார்க்க