``நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?" - கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவ...
முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமான டேவிட் வார்னர்..!
ஆஸி. முன்னாள் கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் இந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும் 161 ஒருநாள் ஆட்டங்களில் 6,932 ரன்களும் எடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை.
தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என இந்திய விழாக்களுக்கு தவறாமல் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்.
"டேவிட் வார்னர் ஆஸ்திரேலியரை போல் அல்லாமல் இந்தியராகவே அதிகம் இருக்கிறார். நான் அதைத்தான் அவரிடம் சொல்லுவேன். 70 சதவிகிதம் இந்தியர்; மீதி 30 சதவிகிதம் ஆஸ்திரேலியர்” என வார்னர் குறித்து அவரது சக தோழர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் அந்தமாதிரி எதுவும் வரவில்லை.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராபின்ஹூட் என்ற திரைப்படத்தில் டேவிட் வார்னர் நடிக்கிறார்.
இந்தப் படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
After shining and leaving a mark on the ground, it is time for him to shine on the silver screen
— Mythri Movie Makers (@MythriOfficial) March 15, 2025
Introducing the widely loved @davidwarner31 to Indian Cinema with #Robinhood in an exciting cameo ❤
GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin@sreeleela14… pic.twitter.com/mVbvNMvouP