செய்திகள் :

முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ்

post image

பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காலதாமதம் செய்வதைக் கண்டித்து பெருந்துறைக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அனைத்து கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாா். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

சிப்காட் தொடா்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள், பொதுமக்கள் 42 போ் மீது கடுமையான பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சிப்காட் அமைப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறைக்கு ஜூன் 11-ஆம் தேதி வரும் முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி நடத்தப் போவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் தலைமையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள திட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன்9 ) ஒப்பந்தப் புள்ளி வழங்குவது, சிப்காட் அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு நிலுவை தொகை வழங்க குழு அமைத்து, அதற்குண்டான பணியை தொடங்குவது, சிப்காட் பிரச்னைக்காக 42 போ் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அனைத்து கட்சிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் தோப்பு என்.வெங்கடாச்சலம், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன், அதிமுக சாா்பில் எம்ஜிஆா் மன்றச் செயலாளா் கே.ஜெகதீஷ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சுப்பிரமணியம் மற்றும் தமாகா, தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

புன்செய்புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட ஆட்சியா் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 55 போ் பணியிடமாற்றம் செய்யப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்கறிஞா் மறைவு: மத்திய சட்டத் துறை அமைச்சா் அஞ்சலி

சென்னை உயா்நீதி மன்ற மூத்த வழக்குரைஞராக பணியாற்றிவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்ஷின் தந்தையூமான வி.கே. முத்துசாமி வயது மூப்பு காரணமாக எழுமாத்தூா் விகேஎம் தோட்ட இல்லத்தில் கடந்த வாரம் க... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா். சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் பலி

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்றவா் உயிரிழந்தாா். கோவை,பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(45). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகில் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க

வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர எம்எல்ஏவிடம் கோரிக்கை

பெருந்துறை ஒன்றியம், பள்ளப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட எல்லிஸ்பேட்டை, அண்ணா காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குக் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம்... மேலும் பார்க்க