செய்திகள் :

முதல்வருக்கு கொலை மிரட்டல்!

post image

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறைவாசி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (பிப்.21) இரவு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நபர் அம்மாநில முதல்வர் பஜன் லால் ஷர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், உடனடியாக விசாரணை மேற்கொண்ட அம்மாநில காவல் துறையினர், அந்த அழைப்பானது தௌஸா மாவட்டத்திலுள்ள சலவாஸ் சிறைச்சாலையிலிருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையும் படிக்க: 'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

பின்னர், அதிகாலை 3 முதல் 7 மணி வரை நடத்தப்பட்ட தேடுதல் சோதனையின்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் அங்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ரிங்கு (வயது 29) என்பவர்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவரிடமிருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 தேர்தலில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பஜன்லால் ஷர்மா அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அ... மேலும் பார்க்க

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கான... மேலும் பார்க்க

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தங்களிடையே நெருங்கிய நட்புற... மேலும் பார்க்க