செய்திகள் :

முதல்வருக்கு தலைசுற்றல் ஏன்? செய்யப்பட்ட பரிசோதனைகள் என்னென்ன? - மருத்துவமனை அறிக்கை

post image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், பரிசோதனையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டதாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று காலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில், "முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி. செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Apollo Hospital has released medical report on the medical tests performed on Chief Minister M.K. Stalin.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க