செய்திகள் :

முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்பனையா? - அண்ணாமலை பதிவு

post image

முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்பனை செய்யப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது.

பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.

பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

சென்னையில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீ... மேலும் பார்க்க

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண... மேலும் பார்க்க

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க