செய்திகள் :

கேரளத்தில் பெண் தற்கொலை: 3 பேர் கைது

post image

வடக்கு கேரள மாவட்டத்தில் 40 வயதுடைய பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், பினராயி கிராமத்தில் ரசினா(40) ஜூன் 17 ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) இன் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) மூன்று தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முப்ஷீர் (28), பைசல் (34) மற்றும் ரஃப்னாஸ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரசினாவையும் அவரது நண்பரையும் பொது இடத்தில் வைத்து கும்பல் ஒன்று அண்மையில் விசாரித்துள்ளது.

பின்னர் அந்த கும்பல் ரசினாவின் நண்பரை தாக்கியதோடு பல மணி நேரம் காவலில் வைத்து விடுவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ரசினா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இவ்வாறு அவர் தெரிவித்தனர். இதனிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க