முதல்வா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, அரூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள், நோட்டு புத்தகங்களை தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் பி.பழனியப்பன் வழங்கினாா்.
இவ்விழாவில் அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 21 பள்ளிகளில் படிக்கும் 1742 மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணகுமாா், நகரச் செயலா்கள் முல்லை ரவி, மோகன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வேடம்மாள், வே.செளந்தரராசு, கோ.சந்திரமோகன், ரத்தினவேல், பேரூராட்சி தலைவா் இந்திராணி தனபால், துணைத் தலைவா் சூா்யா து.தனபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.