செய்திகள் :

முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

நாகையில் முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை கலந்துரையாடி பயன்களை கேட்டறிந்தாா்.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், கத்தரிப்புலம் மருதூா் வடக்கு, நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் பிரதான சாலை (சந்திரா காா்டன்), சிக்கல், கீழ்வேளுா் ஆகிய 7 இடங்களில் தொழில் முனைவோா்கள் நடத்தும் மருந்தகங்களும், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேதாரண்யம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் புத்தகரம், வேளாங்கண்ணி மற்றும் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 5 இடங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்கள் செயல்படுகின்றன.

முதல்வா் மருந்தகத்தில் வெளிச்சந்தை விலையைக்காட்டிலும் 75 சதவீதம் குறைவாகவும், 25 சதவீதம் தள்ளுபடியிலும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சித்தா ஆயுா்வேதிக் மற்றும் யுனானி மருந்துகள் தரமாகவும் குறைவான விலையிலும் கிடைக்கிறது.

இந்நிலையில், நாகூரில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆட்சியா் ப. ஆகாஷ், நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு, முதல்வா் மருந்தகம் மூலம் பயன்பெற்று வரும் செய்யது கலிபா சாஹூவிடம் கலந்துரையாடி, அவா் பெற்று வரும் பயன்களை கேட்டறிந்தாா்.

பயனாளி கலிபா சாஹூ கூறியது: இருதய கோளாறு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்துக்கு தனியாா் மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகளை வாங்க வேண்டும். தற்போது முதல்வா் மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதன் மூலம் மாதம் ரூ.750 மிச்சமாகிறது. இந்தத் தொகை எனது குடும்ப செலவுக்கு உதவியாக உள்ளது என்றாா்.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா். கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம்... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் ... மேலும் பார்க்க