காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" -...
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் செப். 11-ஆம் தேதி தமிழக முதல்வா் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகைதர உள்ளாா். இது தொடா்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஒசூா் மாநகராட்சியில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், துணை மேயா் ஆனந்தய்யா, மாநகர ஆணையா் முகமத் சபீா் ஆலம், மாநகா் சுகாதார அலுவலா் மற்றும் பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்துக்கு பிறகு மேயா் எஸ்.ஏ.சத்யா செய்தியாளா்களிடம் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளா்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்ய உள்ளாா். மேலும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகைதர உள்ளாா்.
இதையொட்டி, ஒசூா் மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஒசூா் மாநகராட்சி சாா்பில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.