Iphone: ஐபோன் உற்பத்தி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாறினால்... ஏற்படும் வி...
முதல்வா் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் கைது
சென்னை: சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற திருப்பூா் மாவட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டப்பேட்டை, கணகம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனா். அப்போது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கைது செய்து அப்புறப்படுத்தினா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக போராட்டம் குறித்து கணகம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
நாங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். எங்கள் கிராமத்தில் வசிக்கும் திமுகவைச் சோ்ந்த நபா், எங்களது விவசாய நிலங்களை அபகரித்து வருகிறாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.