திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
முதல் டி20: இலங்கை வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்களை எட்டி வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் பா்வேஸ் ஹுசைன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 38 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.
தன்ஸித் ஹசன் 16, கேப்டன் லிட்டன் தாஸ் 6, தௌஹித் ஹிருதய் 10, மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் முகமது நயிம் 32, ஷமிம் ஹுசைன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை பௌலா்களில் மஹீஷ் தீக்ஷனா 2, நுவன் துஷாரா, தசுன் ஷானகா, ஜெஃப்ரி வாண்டா்சே ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 155 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 73, பதும் நிசங்கா 42, குசல் பெரெரா 24 ரன்களுடன் வெற்றிக்கு அடித்தளமிட்டு விடைபெற்றனா்.
முடிவில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 11, கேப்டன் சரித் அசலங்கா 8 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில் முகமது சைஃபுதின், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.