செய்திகள் :

முதல் டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

post image

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் செயின்ட் வின்சென்ட்டின் கிங்ஸ்டவுனில் அமைந்துள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மும்பை 2-ஆவது முறை சாம்பியன்

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சௌமியா சர்க்கார் 43 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலங்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் ரோவ்மன் பவலைத் தவிர யாரும் நிலைக்கவில்லை.

அதிரடியாக ஆடிய அவர் 35 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியால் வெற்றி பெற முடிவில்லை. அந்த அணி 19.5 ஓவர்களில் 140 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

தந்தையானார் டெவான் கான்வே!!

நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரருமான டெவான் கான்வேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களின் ஒருவரான டெவான் கான்வே, கடந்... மேலும் பார்க்க

கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டெவன் கான்வே தனது தனது நீண்டகால காதலியான கிம் வாட்சனை கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென... மேலும் பார்க்க

பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தத்த ரசிகர்கள்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு வர்ணனையாளர் பாராட்டியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரி... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன தமிழக வீராங்கனை!

மகளிா் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் மகளிா்... மேலும் பார்க்க

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. 400 ரன்களைக் கடந்து வலுவான முன்னிலை!

டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம் அடித்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா திடலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காலை தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா மோதும... மேலும் பார்க்க