Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து வி...
முதியவருக்கு மண்வெட்டியால் வெட்டு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாதை பிரச்னையால் முதியவரை மண்வெட்டியால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குள்ளப்புரம் கன்னிமாா்புரத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (63). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்கும் பாதை பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், அழகா்சாமி வியாழக்கிழமை காலை வீட்டின் முன் நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த சக்திவேல் அவரிடம் தகராறு செய்து, மண்வெட்டியால் வெட்டினாா்.
மேலும், சக்திவேலுவின் உறவினா்களான பாண்டியம்மாள், அழகுமலை, பகவதி, சுப்பம்மாள் ஆகியோரும் சோ்ந்து அவரைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேல் உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.