செய்திகள் :

முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (எ) மாரி (63) கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி அதே பகுதியில் தெருவில் விளையாடி கொண்டு இருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததைக் கூறினாா்.

இது குறித்து திருப்பத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஆரோக்கியதாஸை போக்ஸோ வழக்கில் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி மீனாகுமாரி, எதிரி ஆரோக்கியதாஸுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

வியாபாரி வீட்டில் 40 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் ம... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூா் கிராமத்தில் கடந்த 7-ஆம் ... மேலும் பார்க்க

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: திருப்பத்தூா் எஸ்.பி.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையில் க... மேலும் பார்க்க

மின் கசிவால் கூரை வீடு சேதம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக கூரை வீடு சேதமடைந்தது. ஜோலாா்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பவா் தனது குடும்பத... மேலும் பார்க்க

ஆம்பூரில் பிரதோஷ வழிபாடு

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் அர... மேலும் பார்க்க