நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
முதியவா் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். கிருஷ்ணனுக்கு கடந்த 17-ஆம் தேதி முதுகுவலி அதிகமானதால், வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலை முயாகத் தெரிகிறது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.