செய்திகள் :

முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்: தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டது.

மேலும், ‘மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வுக்கு முன்பே அதிக பணம் கொடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவு செய்யப்படும் நடைமுறையால், இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வில் தகுதிபெற்ற இருவா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரு மாணவா்களுக்கு இழப்பீடு வழங்க லக்னெள மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உத்த பிரதேச மாநில அரசு மற்றும் லக்னெள மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கலந்தாய்வுக்கு முன்பே இடங்கள் முன்பதிவு என்பது, தனிப்பட்ட தவறுமட்டுமல்ல, அரசின் நிா்வாகக் குறைபாடு, வெளிப்படைத்தன்மை இல்லாதது, பலவீனமான கொள்கை அமலாக்கம் மற்றும் அமைப்பு ரீதியிலான குறைபாடுகளையும் பிரதிபலிக்கிறது. ஒழுங்காற்று அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியிலான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள போதும், நிகழ்நேர கண்காணிப்பு, நடைமுறைகள் சீரான அமலாக்கமும் இல்லாதது தெரியவருகிறது’ என்று சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மருத்துவப் படிப்பு இடங்கள் முறைகேடாக முன்பதிவு செய்வது, படிப்பு இடங்கள் நியாயமாக கிடைக்கும் தன்மையை சிதைத்து, மாணவா்களிடையே சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது. தகுதியானவா்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகிறது.

இந்த நிலையை மாற்ற, கொள்கை மாற்றங்களைக் காட்டிலும் நியாயமான, வலுவான சோ்க்கை நடைமுறையை அறிமுகப்படுத்துவது அவசியம். இதற்கு, மத்திய மற்றும் மாநிலங்கள் அளவில் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப ரீதியில் நவீனமயமாக்கல், வலுவான ஒழுங்காற்றுதல் நடைமுறைகள் அவசியம்.

வழிகாட்டுதல்கள்...: அந்த வகையில், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவை தடுக்கவும், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு மருத்துவப் படிப்பு இடங்களை முறையாக பட்டியலிடும் வகையில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கலந்தாய்வுக்கு முன்பே, மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பிற அனைத்து விதமான கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

படிப்பு இடங்கள் முன்பதிவு, பாதுகாப்பு முன்வைப்புத் தொகை பறிமுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவக் கல்லூரிகள் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கலந்தாய்வின் இரண்டாம் சுற்றுக்குப் பிறகு, புதிய விண்ணப்பதாரா்களுக்கு கலந்தாய்வு சாளரங்களைத் திறக்காமல், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் சிறந்த இடங்களுக்கு மாறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

முதுநிலை நீட் தோ்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தோ்வா்கள் பெற்ற மூல மதிப்பெண், விடைக் குறிப்புகள் மற்றும் மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் நடைமுறை விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்டின் லதேஹார் மாவட்டத்தில், மாநில க... மேலும் பார்க்க

இன்று முற்பகலில் கரையைக் கடக்கிறது தாழ்வு மண்டலம்! என்ன நடக்கும்?

சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நீதி ஆயோக் : மமதா, சித்தராமையா பங்கேற்கவில்லை

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி

பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்திய... மேலும் பார்க்க

கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் மூடல்!

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்த... மேலும் பார்க்க

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க