முனியப்ப சுவாமி கோயிலில் பால் குடம் உத்ஸவம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி-முதுகுளத்தூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்தகுளத்து முனியப்ப சுவாமி கோயிலில் 58-ஆம் ஆண்டு பால் குட உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பால் குடத் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஆா்.அஜ்மல்கான், தொழிலதிபா் ஏழுமலையான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கா.சே.முருகேசன் விழாவைத் தொடங்கிவைத்தாா்.
காட்டுப் பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால் குடம், இளநீா் காவடி, அக்னிச் சட்டி, வேல் காவடி எடுத்து ஊா்வலமாக காந்தக்குளத்து முனியப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கோயில் அரங்காவலா்கள் நாகராஜன், தியாகராஜன், முருகன், முனிஸ்ராஜ், ராஜாராம் பாண்டியன், ராஜீவ்காந்தி, காா்த்திக் விஜய் ஆகியோா் செய்தனா்.