செய்திகள் :

முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!

post image

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போக்குவரத்துத் துறை முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி ரொக்கம், 40 கிலோ வெள்ளிக் கட்டிகள், 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த அளவுக்கு பணம், வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதுவும் தலைமைக் காவலர் வீட்டில் ரூ.3 கோடி அளவுக்கு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவைகள் அல்லாமல், தலைமைக் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு இன்னமும் கண்டறியப்படவில்லை.

அது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை சதமடித்து எங்கேயோ சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஏழைகளுக்கு இனி கால் கொலுசுக்கும் வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கம் நிலையில் குவியல் குவியலாக வெள்ளிக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விடியோக்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

சந்தேகம் வந்தது எப்படி?

போக்குவரத்துத் துறையில் தலைமைக் காவலராக இருந்த நபர், கடந்த ஆண்டு பணியை ராஜிநாமா செய்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக அவர் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வருவாய்க்கும் சொத்துக்கும்

அவர் பெற்ற வருவாய்க்கும் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மத்திய பிரதேச அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையை தொடர்ந்து அரசு கண்காணித்து வரும் நிலையில், இந்த விவரம் வெளியே வந்துள்ளது.

மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றொரு உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர் என்று பெரு... மேலும் பார்க்க

எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: சி.டி.ரவி

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினா் சி.டி.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்ட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் பெரும் நிலச்சரிவு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தார்ச்சுலா-தவாகாட்-லிபுலேக் சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. பித்தோராகரில் உள்ள தவாகாட் அருகே காலை 11 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக மாவட்ட நீதிபதி வினோத் கோஸ்வா... மேலும் பார்க்க

உத்தரகண்டின் பித்ரோகரில் பெரும் நிலச்சரிவு

உத்தரகண்டின் பித்ரோகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் சாலை மூடப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், பித்ரோகரில் உள்ள தவாகத் அருகே காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வினோத் க... மேலும் பார்க்க

மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு சிறை!

மும்பையில் மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட முன்னாள் பேராசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தானே நகரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!

அம்பேத்கர் குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கர்நாடக அமைச்சர் விமர்சித்துள்ளார். கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார... மேலும் பார்க்க