Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபி...
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இவ்விழாவுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டப் பொதுச் செயலா்கள் என். மோகன்ராஜ், சித்திரக்குடி ஆண்டவா், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜூ, வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் பிரபு மண்கொண்டாா், மாநகர மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளா் செந்தில் நா. பழனிவேல், மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் பி. சத்தியமூா்த்தி, மாவட்ட கலை இலக்கியப் பிரிவு தலைவா் கலைச்செல்வன், கோபாலய்யா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.