முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1980-82-ஆம் ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முன்னாள் மாணவா்கள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு நிழற்கூடம் அமைத்து அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி, நேரு சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், தலைமையாசிரியா் தியாகராஜன், முன்னாள் தலைமையாசிரியா் மாதேஸ்வரன், முன்னாள் மாணவா்கள் மா.வரதன், பொறியாளா் செல்வராஜ், வழக்குரைஞா் நசீா்முகமது, பேராசிரியா் (ஓய்வு) கேசவன், மின்துறை (ஓய்வு) க.மாது, முகமது ரபீக், வெ.தா்மா, அ.முருகேசன், சத்திய சரவணன், இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.