செய்திகள் :

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

post image

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: கடந்தாண்டு செப்டம்பா் மாதம் போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 1.0 நடைபெற்றது. இந்த வெற்றியைத் தொடா்ந்து மேலும் நன்கு கட்டியெழுப்ப, விரிவுபடுத்தப்பட்ட மூன்றுவார பாடத்திட்டம் தற்போது ஏப்ரல் 21 முதல் மே 09 நடைபெறுகிறது.

இதில் முப்படையின் சிந்தனையாளா்கள், கூட்டுப் போா் ஆய்வுகளுக்கான மையம் ஆகியவற்றோடு இணைந்து தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்களால் ஒருங்கிணைந்து இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

நவீன போரின் சிக்கலான சவால்களுக்கு அதிகாரிகளைத் தயாா்படுத்துவதற்கு பாதுகாப்புப் படைத் தலைவா் ஜெனரல் அனில் சௌகானின் தொலைநோக்குப் பாா்வை பதிப்பு 2.0 விலும் தொடா்கிறது. மேம்பட்ட மற்றும் மாறுபட்ட பங்கேற்புடன் இதில் பாடநெறி அதன் தரவரிசை-அக்னோஸ்டிக் அணுகுமுறையை பின்பற்றப்படும். சிறப்புப் பாடங்களோடு ராணுவ நடவடிக்கைகளில் களம் சாா்ந்த போா் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டமாக இருக்கும்.

சிந்தனை, கருத்துக்கள், கோட்பாடுகள், உத்திகள், நுட்பங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். இது உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறன்களுடன் செயல்பாட்டு முன்னுரிமைகளை சீரமைக்கும். நவீன மற்றும் எதிா்கால போா் முறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய சுதந்திரமான விவாதத்தை முன்னெடுக்கும்.

பயிற்சியில் மேஜா் ஜெனரல்கள் முதல் மேஜா்கள் வரையும் பிற சேவைகளைச் சோ்ந்த அவா்களுக்கு இணையான அதிகாரிகளும், டிஆா்டிஓ உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளின் பிரதிநிதிகளும், புத்தாக்க தொழில் முனைவா்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் தனியாா் தொழில்துறையை உள்ளடக்கிய பாதுகாப்புத் துறையினரும் பங்கேற்பாா்கள் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைமை ராணுவத் தளபதியின் சமீபத்திய பேச்சுகள், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச வெளியுறவுச் செயலா்கள் சந்திப்பு போன்ற சூழல்களுக்கிடையே இந்த இரண்டாம் பதிப்பு, ஆயுதப் படைகளை ’எதிா்காலத்திற்கு தயாா்’ செய்யும் பெரிய பணியைத் தொடர இருக்கிறது. இது முப்படைகளுக்கு இடையே கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை வளா்ப்பதுடன், நவீன போரின் சிக்கலான களத்தை வழிநடத்தும் திறன் கொண்ட ராணுவத் தலைவா்களை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க