செய்திகள் :

மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டி

post image

மும்பை கொங்கன் பகுதி

மகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி, மும்பை

கொங்கன் பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்கள் மும்பையில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக மாநில அரசு பேருந்து மற்றும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களை இயக்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு அரசியல் கட்சிகள் இலவச பஸ்களை இயக்குவது வழக்கம்.

மும்பை மாநகராட்சி தேர்தல்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்களை அரசியல் கட்சிகள் கொங்கன் பகுதிக்கு இயக்கி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி, மும்பை

சிவசேனா

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக இந்த ஆண்டு 2379 இலவச பஸ்களை இயக்க வருகிறது.

இதில் தானேவிலிருந்து 895 பஸ்களும், கல்யாணிலிருந்து 712 பஸ்களும், மும்பையிலிருந்து 703 பஸ்களும் இயக்கப்படுகிறது.

அதில் 95,160 பயணிகள் கொங்கனுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு இலவச சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று சிவசேனா தலைவர் ஒருவர் கூறினார்.

"ஒட்டுமொத்தமாக, நாங்கள் 1,25,000 -க்கும் அதிகமான பக்தர்களை அழைத்து செல்கிறோம். வேறு இது எந்தக் கட்சியையும் விட மிக அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே சிவசேனா

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க அமைச்சர் ஆசிஷ் ஷெலார் சொந்தமாக 100 பஸ்கள் மற்றும் ஒரு ரயிலை இலவசமாக கொங்கன் பகுதிக்கு இயக்க முடிவு செய்துள்ளார்.

பாஜக

பா.ஜ.க மற்றும் அதன் கட்சி தலைவர்கள் சார்பாக 1000 இலவச பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. பா.ஜ.க 550 இலவச பஸ்களை இயக்கி வருகிறது.

மும்பை பா.ஜ.க துணைத்தலைவர் சுஹாஸ் ஆதிவாரேகர் இது குறித்து கூறுகையில்,''பா.ஜ.க சார்பாக இந்த ஆண்டு 550 பஸ்கள் கொங்கன் பகுதிக்கு இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு பஸ்சிலும் 42 இருக்கைகள் உள்ளது. இது தவிர பா.ஜ.க தலைவர்கள் ஆசிஷ் ஷெலார், நிலேஷ் ரானே, நிதேஷ் ரானே, மங்கள் பிரபாத் லோதா ஆகியோரும் தலா ஒரு ரயிலை இலவசமாக இயக்க முன்வந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி

மேலும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கட்சி கவுன்சிலர்கள் சார்பாக 500 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிடப்பட்டு அரசு பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ்சில் பயணம் செய்பவர்கள் பட்டியலும் தயாராகிவிட்டது. ஒரு பஸ்சிற்கு ரூ.31 ஆயிரம் வாடகை பேசப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

மாநில விழாவாக விநாயகர் சதுர்த்தி

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொங்கன் பகுதியில் உள்ள ரத்னகிரி, ராய்கட், சிந்துதுர்க் பகுதிகளுக்கு 15 லட்சம் மக்கள் செல்கின்றனர்.

ஏற்கெனவே அதிகமானோர் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். 3000-க்கும் அதிகமான இலவச பஸ்கள் இயக்கப்பட்டாலும் மும்பையில் இருந்து கோவா செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இச்சாலை பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.

இது தவிர பா.ஜ.க கூட்டணி அரசு மும்பையில் மராத்தியர்கள் கணபதி விழாவை கொண்டாடுவதற்காக ரூ.11.50 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

இதில் 1800 கணபதி மண்டல்களுக்கு தலா ரூ.25000 விழா நிதியாக கொடுக்கப்பட இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது விநாயகர் சதுர்த்தி விழாவை மாநில விழாவாக அறிவித்து மாநில அரசு கடந்த வாரம் அரசாணையும் பிறப்பித்துள்ளது.

ஒரு குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து சென்ற செவிலியர் - குவியும் பாராட்டுகள்!

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக காட்டாற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் செவிலியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. காதைக் கிழிலும் இரைசல... மேலும் பார்க்க

அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" - நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ... மேலும் பார்க்க

விநாயகர் விசர்ஜனம்: ``மண்சிலைக்கு திரும்பினாதான் எங்க வாழ்க்கையும், பூமியும் நல்லா இருக்கும்''

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு, பட்டு கண்ணம் செஞ்ச மண்ணு அது பொன்னூறு, காது செஞ்ச மண்ணு அது மேலூறு…அடடா இப்பெல்லாம் எங்க மண்ணில் சிலை செய்வாங்க?, இந்த காலத்துல போய் மண்ணை மிதிச்சு ரெடி பண்ணி நாள் கணக்க... மேலும் பார்க்க

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' - Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டி... மேலும் பார்க்க

``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கதை

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஸ்ரக் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் ராவணனை தங்கள் முன்னோராக கரு... மேலும் பார்க்க

``சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட்பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூ... மேலும் பார்க்க