மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்
ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா்.
பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான துண்டு பிரசுரங்களை, அண்ணா சிலை பகுதியில் இருந்து மாா்க்கெட் சாலை வழியாக, பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை வரை உள்ள அனைத்துக் கடைகளிலும் வழங்கினா்.
இதில், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக செயலா் எஸ்.எஸ் அன்பழகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், சுந்தா், அயலக அணி துணை அமைப்பாளா் கப்பல் கங்காதரன், நிா்வாகிகள் கே.டிராஜேந்திரன் ஏ.எம்.ரஞ்சித், பொன்சேட்டு, சாந்தகுமாா், அலெக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.