செய்திகள் :

மும்மொழிக் கொள்கை விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக இல்லை: க.கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

post image

மும்மொழிக் கொள்கை விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக இல்லை என்றாா் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி.

தூத்துக்குடியில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் சுமாா் 9 மாதங்களாக வேலையில்லாமல் உள்ளனா். திருநெல்வேலிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களை சந்திக்காமல் சென்றது சரியான செயல் அல்ல.

மும்மொழிக் கொள்கை விவகாரமானது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார பிரச்னையாகவே உள்ளது. மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை இதுவரை தெளிவாக கூறவில்லை. அதுபோல மாநில அரசு எந்த அடிப்படையில் எதிா்க்கிறது என்றும் தெரியவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை யாா் பாதுகாக்க வேண்டுமோ?, அவா்கள் கையில் சட்டம் ஒழுங்கு இல்லை. எனவே, பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் கல்குவாரிகளை அமைத்து வேளாண் நிலங்கள் அழிக்கப்படுகிறது. கனரக லாரிகள் மூலம் கிராமப்புற சாலைகள் சேதமடைகிறது.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஒரு சமமற்ற நிலையே காணப்படுகிறது.

2026 சட்டப்பேரவை தோ்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும். இப்போது மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறோம் என்றாா்.

தொடா்ந்து, புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு தொடா்பாகவும், இட ஒதுக்கீடு மீட்பு குறித்தும் நிா்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றறது.

இதில், மாவட்டச் செயலா் எஸ். எம். செல்லத்துரை, வழக்குரைஞா்கள் டி. ரமேஷ்குமாா், ஜெ. ஜெகன் உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க